இந்தியா, மார்ச் 21 -- குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் விரும்பும் மாற்றங்கள் என்னவென்று பாருங்கள். குழந்தைகள் எப்போதும் அதை வாய் விட்டு கூறமாட்டார்கள். ஆனால் அவர்கள் சில மாற்றங்களை கட்டாயம் விரும்புவார்கள். பொறுமை, புரிதல், ஊக்கம் மற்றும் நம்பிக்கை என அவர்களுக்கு தேவை. அது குழந்தை-பெற்றோர் உறவை வலுவாக்குகிறது. இது மகிழ்ச்சிகரமான இல்லத்தை அமைக்கிறது.

குழந்தைகள் தங்களின் பெற்றோரை அதிகம் நேசிக்கிறார்கள். அவர்கள் அதிக நேரம் அவர்களுடன் செலவழிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களின் சிந்தனைகள் மற்றும் ஆர்வங்களில் பெற்றோர்கள் கட்டாயம் விருப்பம் காட்டவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

குழந்தைகள் தங்கள் பெற்றோர் தங்களை ம...