இந்தியா, மார்ச் 17 -- ஒரு குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது. ஏன் என்று தெரியுமா? அந்த குழந்தை நன்றாகப் படிக்கிறது. அது ஒழுக்கமாக இருக்கிறது. அந்த குழந்தைதான் நல்ல குழந்தை, வீட்டு வேலைகளை ஒழுங்காகச் செய்கிறது, என்று எண்ணற்ற விஷயங்களை வைத்து ஒரு குழந்தையையும், மற்ற குழந்தைகளுடன் பெற்றோர் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அதுபோல் ஒப்பிடக்கூடாது. ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவருக்குமான திறமை என்பது வேறு. எனவே ஏன் ஒரு குழந்தையை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு குழந்தையும் வித்யாசமானவர். உங்கள் குழந்தை அவர்களின் சிறப்பான வழிகளில் தனித்தன்மையானவர்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் டைம்லைன் என்பது வேறு. எனவே அதை அதிகப்படியாக நீங்கள் வற்புறத்தக்கூடாது. ஒரு குழந்தை 10 வயதில் செய்...