இந்தியா, மார்ச் 14 -- எல்லா பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகள் படிப்பில் முதலிடம் பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் உங்கள் குழந்தைகளை தினமும் படிக்கும்படி ஊக்குவிப்பது, அவர்களை கவனித்து, பாடத்தில் ஊன்றி படிக்கவைப்பதெல்லாம் சவாலான ஒன்று. குழந்தைகளுக்கு எப்போதும் கவனச்சிதறல் ஏற்படும். ஆர்வம் குறையும், குறிப்பாக படிப்பு போர் அடிக்கும் விஷயமாக மாறும். எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளை படிககும்படி ஊக்குவிக்க என்ன செய்யலாம். அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. என்ன செய்யலாம் பாருங்கள்.

குழந்தைகளுக்கு ஒரு வழக்கத்தை உருவாக்குவது சிறந்தது. ஏனெனில் நீங்கள் அவர்களுக்கு படிப்பதற்கு ஒரு நேரத்தை ஒதுக்கினால், அவர்கள் அந்த நேரத்தில் தினமும் படிக்க அவர்களின் மூளை பழக்கப்படுத்திக்கொள்ளும். இதனால்தான் நீங்கள் அவர்களுக்...