இந்தியா, மார்ச் 16 -- பலமான பெற்றோர் - குழந்தைகள் பிணைப்புக்கு நம்பிக்கைதான் அடித்தளமாக இருக்கவேண்டும். ஆனால் சில நேரங்களில், பெற்றோர், தெரியாமலேயே உங்கள் சிறிய விஷயங்களில் குழந்தைகளின் நம்பிக்கையை குலைத்துவிடுகிறார்கள். இது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாதுபோல தோன்றலாம். ஆனால் குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றில் இது கடும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. பெற்றோர் எப்படி குழந்தைகளின் நம்பிக்கையை உடைக்கிறார்கள் மற்றும் அதை தவிர்ப்பது எப்படி என்று பாருங்கள்.

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வாக்குறுதிகள் கொடுக்கிறீர்கள் என்றால், அதை காப்பாற்றுங்கள். அதை பெற்றோர் காப்பாற்ற தவறும்போது, குழந்தைகள் வார்த்தைகள் அர்த்தமற்றவை என்று புரிந்துகொள்கிறார்கள். வெளியில் அழைத்துச் செல்வேன் என்ற சிறிய வாக்குறுதியைக் கூட உங்களால் காப்பா...