இந்தியா, ஜூன் 22 -- உலகிலேயே மகிழ்ச்சியான குழந்தைகளை வளர்ப்பதற்கு, உலகிலேயே மகிழ்ச்சியான குழந்தைகளை வளர்க்கும் டச்சுப்பெற்றோர்களின் வளர்ப்பு முறை தெரியவேண்டும். எனவே அவர்கள் மகிழ்ச்சியான குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

விளையாட்டு பூங்காக்களில் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது அல்லது காடுகளுக்கு அழைத்துச்செல்வது என டச்சுக்குழந்தைகள் வெளியில் விளையாடுவதற்கும், வெளியிடங்களுக்கு அழைத்துச்செல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இது குழந்தை வயது முதலே அவர்கள் செய்கிறார்கள். இதனால் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுகிறது.

குழந்தை வயதிலேயே டச்சுக்குழந்தைகள் சுயமாக தங்களின் வேலைகளை செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் முடிவுகளை அவர்களே எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இது அவர்களுக்கு சுதந்திரத்தையும், தன்...