இந்தியா, மார்ச் 10 -- உங்கள் குழந்தைகளுக்கு பொய்யுரைக்கும்போது அது எளிதாக தப்பிக்கும் வழியாகத் தோன்றலாம். ஆனால் குழந்தைகள் உண்மையை புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் பொய்யுரைக்கும்போது உண்மை வெளிப்பட்டே தீரும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்களுக்கு பொய்யுரைப்பதால் வரும் பின்விளைவுகளை நீங்கள் முன்னரே கற்றுக்கொடுக்கவேண்டும். இது அவர்களுக்கு நேர்மை மற்றும் நம்பிக்கையை வளர்க்க உதவும்.

பெற்றோர்களை, மூத்தோர்களை, ஆசிரியர்களை, உடன் பிறந்த சகோதர, சகோதரிகளை மதிக்கவேண்டும். இது ஒவ்வொரு குழந்தையும் பின்பற்ற வேண்டிய முக்கிய விதியாகும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு நன்றி, மன்னித்துவிடுங்கள் மற்றும் தயவுசெய்து ஆகியவை கூற கற்றக்கொடுங்கள். தேவைப்படும்போது அவர்கள் இந்த வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். இதனால் அவர்கள் நாள்பட நல்ல பழக்கங்கள் உருவாகும். மற...