இந்தியா, மே 24 -- உங்கள் குழந்தைகளை அன்றாடம் கண்காணிப்பது என்றால் என்ன? பள்ளிக்கு எழுந்து அவசரஅவசரமாக ஓடுவது, வீட்டு வேலைகளைப் பார்ப்பது மற்றும் உங்களின் தனிப்பட்ட வேலைகளைச் செய்வது என நீங்கள் ஓடிக்கொண்டே இருப்பீர்கள். இதற்கு இடையில் பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான தொடர்பு இல்லாமல் போகும். எனவே நீங்கள் அன்றாடம் அவர்களை கண்காணிக்க என்று சில நிமிடங்களை ஒதுக்கவேண்டும். இது உங்களிடையே பிணைப்பை ஏற்படுத்தும். உணர்வு ரீதியான பாதுகாப்பை வழங்கும்.

உங்கள் குழந்தைகளுக்கு உங்களிடம் அவர்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள சிறிது நேரம் உள்ளது என்று தெரிந்தால் அது அவர்களுக்கு உணர்வு ரீதியான நம்பிக்கையை உண்டாக்கும். நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் உங்களிடம் சொல்ல விரும்பாத விஷயங்களைக் கூட சொல்லத் துவங்குவார்கள். எனவே இந்த நேரம் அவர்களுக்கு மிகவும் அவசியமானது...