இந்தியா, மார்ச் 9 -- உங்கள் குழந்தைகளிடம் ஒழுக்கத்தை வளர்த்தெடுக்க நீங்கள் சில விஷயங்களைப் பின்பற்றவேண்டும். அவர்களுக்கு நீங்கள் வீட்டில் சில விதிகளை விதிக்கவேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஒழுங்கானவர்களாக ஓரிரவில் மாற்ற முடியாது. அதை நீங்கள் ஒவ்வொரு நல்ல பழக்கங்கள் மூலம் வளர்த்தெடுக்கவேண்டும். அவர்களின் நடவடிக்கைகளை கட்டமைக்க நீங்கள் சில வீட்டு விதிகளை விதிக்கவேண்டும். நீங்கள் அவர்களுக்கு இந்த விஷயங்களை கட்டாயம் கற்றுக்கொடுக்கவேண்டும். இதனால் அவர்கள் மிகுந்த ஒழுங்குடன் வளர்கிறார்கள்.

அவர்களின் பொருட்களை களைத்து போட்டிருந்தால் அதை அவர்கள்தான் அடுக்கவேண்டும். அவர்கள் தண்ணீரை கொட்டினால் அதை அவர்கள் தான் சுத்தம் செய்யவேண்டும். அவர்கள் படித்த புத்தகங்களை அவர்கள்தான் அடுக்கி வைக்கவேண்டும். ஒவ்வொரு குழந்தையும் சுத்தம் செய்ய கற்றுக்கொள்ள...