இந்தியா, மார்ச் 7 -- உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் அடிக்கடி வேண்டாம் என்று கூறினால் அவர்கள் விரக்தியடைவார்கள். அதற்கு பதிலாக நீங்கள் நேர்மறையாக சிலவற்றைக் கூறி அந்த வேண்டாம் என்பதை வலியுறுத்தலாம். ஆனால் வேண்டாம் என்பதை, வேண்டாம் என்று சொல்லாமல் வேறு எப்படி கூறுவது என நீங்கள் குழம்பலாம். ஆனால் அதற்கு மாற்றாக சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று பாருங்கள். சில விஷயங்களை நீங்கள் விளக்கிக்கூறும்போது, அவர்கள் தங்களின் எல்லைகளை புரிந்துகொள்கிறார்கள். அவர்களிடம் அது ஒத்துழைப்பை வளர்க்கும். புரிதலை ஏற்படுத்தும். இதனால் உங்கள் குழந்தைகளுடன் உங்களால் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.

உங்கள் குழந்தைகளிடம் வேண்டாம் என்று கூறுவதற்கு பதில், நீங்கள் சில விஷயங்களை மாற்றாகக் கூறலாம். அது 'நீங்கள் அதற்கு பதில் இதைச் செய் அல்லது இதை முயற்சித்து பார்' என்று கூற...