இந்தியா, மார்ச் 3 -- நாம் பேசும் வார்த்தைகள்தான் நம் குழந்தைகளை வடிவமைக்கும் ஒன்றாகும். அவர்கள் எப்படி உருவாகிறார்களோ அதற்கு நாம் பேசும் வார்த்தைகள் முக்கிய காரணமாகும். அவர்களை நீங்கள் ஊக்குவிக்கும் வார்த்தைகளைக் கூறும்போது, அது அவர்கள் தங்கள் மீது நம்பிக்கை கொள்ளவும், அவர்கள் மீண்டு எழவும் உதவுகிறது. இது அவர்களுக்கு நேர்மறை மனநிலையை ஊக்குவிக்கிறது. அவர்களை ஊக்கப்படுத்த நீங்கள் கூறவேண்டிய வார்த்தைகள் என்னவென்று பாருங்கள். இதனால் அவர்களின் திறன் அவர்களுக்கு புரியும்.

இது பார்க்கும்போது எளிய வார்த்தைகளாக தோன்றலாம். ஆனால் உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் அவர்களை எண்ணி பெருமை கொள்கிறீர்கள் என்று கூறும்போது, இது எவ்வித நிபந்தனையுமின்றி அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. இது அவர்கள் செய்யும் காரியத்திற்காக மட்டும் அவர்களை நினைத்து நீங்கள் பெரு...