இந்தியா, மார்ச் 11 -- நம் வீட்டில் உள்ள குழந்தைகள் தினமும் ஏதேனும் ஒரு காய்கறியை சாப்பிட வேண்டும். தினமும் காய்கறி சாப்பிட வேண்டும் என்று உணவில் நிபுணர்களும் பரிந்துரை செய்கின்றனர். அவர்களது வளர்ச்சியை ஆதரிக்கவும் காய்கறிகள் மிகவும் உதவிகரமானதாக இருக்கின்றன. ஆனால் நாம் கொடுக்கும் காய்கறிகளை குழந்தைகள் விரும்புவதில்லை. அதற்கு காரணம் அவர்கள் விரும்பும் சுவையில் அவை இல்லாமல் இருப்பது ஆகும். எனவே அவர்கள் விரும்பும் விதத்தில் சற்று உணவு முறையை மாற்றினால் அவர்கள் அனைத்து காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வகையில் கொத்தவரங்காய் ஒரு சிறந்த சத்தான காய்கறி ஆகும். கொத்தவரங்காயை சமைக்கும் போது நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிலருக்கு இது பிடிக்காமல் இருக்கலாம். இனி பாரம்பரியமான கொத்தவரங்காய் பருப்பு உசிலியை செய்து கொடுத்து ப...