Chennai,சென்னை, ஏப்ரல் 2 -- ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 310 மாணவர்கள் அரசுப் பள்ளியில் புதியதாக சேர்ந்துள்ளதாக தமிழ்க பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் கடந்த மார்ச் மாதம் 01 ஆம் தேதி அக்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினராலும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2025 - 2026ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளியில் சேருகின்ற மழலைகளின் சேர்க்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது மழலைகளுக்கான சேர்க்கை சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அதோடு அவர்களை வாழ்த்தி தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கியிருந்தார். இப்பள்ளியில் எல்...