இந்தியா, மார்ச் 27 -- நமது வீடுகளில் விஷேசம் என்றாலே உடனே வித விதமான உணவுகள் செய்வதே வழக்கமான ஒன்றாகும். தமிழர்கள் ஒவ்வொரு விழாக்களையும் உணவுகளின் வாயிலாகவே கொண்டாடுகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தனித்துவமான உணவு வகைகள் பிரபலமாக இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக நமது வீடுகளில் செய்யும் உணவுகள் என்றைக்கும் தனித்துவமான சுவையில் இருக்கின்றன. இந்த வகையில் இந்த காலத்து நபர்களில் சிலருக்கு வீட்டுகளில் செய்யும் உணவுகள் செய்யத் தெரிவதில்லை. நாம் வீட்டில் அடிக்கடி செய்யும் ஒரு இனிப்பு உணவு என்றால் அது பாயாசம் தான். இது செய்வதற்கும் மிக எளிமையான உணவாகும். வழக்கமாக நாம் சேமியா, ஜவ்வரிசி வகை பாயாசங்களும் செய்கிறோம். இன்று வித்தியாசமாக அரிசி பாயாசம் செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | வழக்கமான இ...