இந்தியா, மே 13 -- உங்கள் பெண் குழந்தைகளுக்கு நீங்கள் சிறப்பான பெயர்களை தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். அது அவர்களின் பெரும் அடையாளம் ஆகும். உங்கள் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்களை தேர்ந்தெடுக்க, அமைதி, தூய்மை என்ற அர்த்தம் கொண்ட பெயர்கள் வெள்ளைப் பூக்களிடம் இருந்து பறிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. இந்தப்பெயர்கள், கருணை மற்றும் அழகிய வெள்ளை மலர்களைக் குறிப்பவையாகும். தனித்தன்மையான இந்த பெண் குழந்தைகளின் பெயர்களை உங்கள் பெண் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

ஷர்வானி என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து உருவான பெயராகும். இதற்கு புனிதமான மற்றும் தூய்மையான என்று அர்த்தம். இது பெண் தெய்வங்களுக்கு படைக்கப்படும் மலர்களுடன் தொடர்புகொண்ட பெயராகும்.

மல்லிகா என்றால் மல்லிகை என்ற வெண்ணிற மலரிடம் இருந்து பெறப்பட்...