இந்தியா, மே 26 -- ஆசிர்வாதம் என்ற அர்த்தம் கொண்ட குழந்தைகளின் பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. குழந்தைதான் ஒருவரின் வாழ்வில் அதிகம் கொண்டாடப்படும் விஷயங்களுள் ஒன்று. அன்பு, நம்பிக்கை மற்றும் புதிய துவக்கம் என்பதைச் சுட்டிக்காட்டும். இந்திய மொழிகளில் எண்ணற்ற பெயர்கள் உள்ளது. அந்தப்பெயர்கள் அர்த்தம் நிறைந்ததாகவும் இருக்கும். உங்களுக்கு பாரம்பரியமான அல்லது நவீனமான பெயர்கள் வேண்டுமென்றால் இங்கு ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்ற அர்த்தத்தில் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் உங்கள் குழந்தைகளுக்கான பெயர்கள் இருக்குமா என்று பாருங்கள்.

ஆஷ்ர்யா என்பது கடவுளின் தேசத்தில் இருந்து என்ற பொருளைத் தரும் பெயராகும். அமைதியான பெயர். ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற அர்த்தம் கொண்டது. இந்தப்பெயருக்கு உங்கள் குழந்தையின் இருப்பு தெய்வீகத்தன்மை கொண்டது என்பதைக் கா...