இந்தியா, ஏப்ரல் 15 -- குர் பராத்தா என்பதை அரை வட்ட வடிவில்தான் செய்து எடுக்கவேண்டும். ஏனெனில், மாவை வட்டமாக தேய்த்துவிட்டு ஒருபுறத்தில் பாதியளவில் நெய், வெல்லம் மட்டும் தேங்காயைத் தூவி அதை மறுபுறத்தை வைத்து மூடிவைக்கவேண்டும். இதை இருபுறமும் தோசைக்கல்லில் சேர்த்து வாட்டி எடுக்கவேண்டும். இது இனிப்புச் சுவையில் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்வீர்கள். இது பராத்தா மட்டுமல்ல ஒரு ஸ்னாக்சும் என்பதால் இதை அடிக்கடி செய்வீர்கள். இதை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* கோதுமை மாவு - ஒரு கப்

* வெல்லம் - முக்கால் கப் (துருவியது)

* நெய் - கால் கப்

* ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு (5 ஏலக்காய்களை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் சேர்த்து அடித்து ...