இந்தியா, மார்ச் 28 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் குரு பகவான். இவர் மிகவும் சிறப்பு வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் தனது ராசி சுழற்சியை முடிப்பதற்கு சுமார் 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.

இந்நிலையில் தற்போது குருபகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கின்றார். குருபகவான் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் த...