இந்தியா, மே 11 -- ஜோதிடத்தின் படி, ஒன்பது கிரகங்களில் வியாழன் மிக முக்கியமானது. தேவர்களின் குருவான குரு, ஒருவரின் ஜாதகத்தில் வலுவான நிலையில் இருந்தால், அவர்களின் வாழ்க்கையில் அற்புதமான நன்மைகள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர்.

குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி மே பதினொன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் மாறுகிறார்.

குரு பெயர்ச்சி

திருக்கணித பஞ்சாங்கப்படி மே 14 ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார். இந்த யோகம் பல ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கூறப்படுகிறது. கடினமான சூழ்நிலைகள் இருந்த போதிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்க...