இந்தியா, மே 13 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார்.

அந்த வகையில் குரு பகவான் வருகின்ற மே 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார். குரு பகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குரு பகவான் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை கொடுக்கும் கிரகமாக இருந்தாலும் அவரின் இடமாற்றத்தை பொறுத்து சில ராசிகளுக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் குரு பகவானின் மிதுன ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் சிக்கல்களை சந்திக்க போக...