இந்தியா, ஏப்ரல் 12 -- Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படக் கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் செல்வம், செழிப்பு, சொகுசு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

தற்போது குருபகவான் 12 மாதங்களுக்கு பிறகு ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்ல போகின்றார். வருகின்ற மே மாதம் இந்த நிகழ்வு நடக்க உள்ளதால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. குரு பகவானின் மிதுன ராசி...