இந்தியா, ஜூலை 11 -- சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் ஜூன் 20 அன்று வெளியான திரைப்படம் குபேரா.

திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திற்குள் குபேரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமென்று அந்தப்படத்தை வாங்கி இருந்த பிரைம் வீடியோ ஓடிடி தளம் அறிவித்து இருந்த நிலையில், தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன் படி குபேரா திரைப்படம் ஜூலை 18 ஆம் தேதி ஓடிடியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும், தமிழில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

முன்னதாக அமேசான் பிரைம் வீடியோவுடனான பிரச்சினையை படத்தின் தயாரிப்பாளர் பேசி இருந்தார்.

அவர் பேசும் போது, ' தெலுங்கு திரைப்படங்கள் திரையரங்க...