இந்தியா, ஏப்ரல் 18 -- குபேரன் ராசிகள்: இந்து மதத்தின் வழிகாட்டுதலின்படி அக்ஷய திருதியை மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்த திருநாளில் எந்த வேலைகள் செய்தாலும் அது இரட்டிப்பாக கிடைக்கும் என்பது ஐதீகமாகும். இந்த நாளில் எதை வாங்கினாலும் அது நம்மிடம் பெருகும் எனக் கூறப்படுகிறது.

இந்த அக்ஷய திருதியை புனித நாளில் லட்சுமி தேவி மற்றும் குபேரன் வழிபாடு செய்வதன் மூலம், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை வாங்குவது மூலம் மங்கலம் உண்டாகும் என கூறப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு அக்ஷய திருதியை வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வருகின்றது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மங்களா யோகங்கள் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. சதுர்கிரக யோகம், லட்சுமி நாராயண யோகம், கஜகேசரி யோகம், மாளவ்ய யோகம் போன்ற நான்கு ...