இந்தியா, பிப்ரவரி 25 -- குட் பேட் அக்லி: 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் பதிவில், 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் வருகிற பிப்ரவரி 28ம் தேதி வெளியாக இருக்கிறது' என்று பதிவிட்டு இருக்கிறது.

மேலும் படிக்க | அஜித் சாருடன் நடித்த அப்பா பாண்டியன் என நடிகர் பாண்டியனின் மகன் ரகு பேட்டி

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித் குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் 'குட் பேட் அக்லி' என்ற படத்தைத் தயாரித்து இருக்கிறது. மேலும், இப்படம் வரக்கூடிய, இந்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து, 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில...