இந்தியா, ஏப்ரல் 20 -- தமிழ் சினிமாவில் மாபெரும் ஜாம்பவானாக உருவெடுத்தவர் வைகைப் புயல் வடிவேலு. தன்னுடைய அசராத காமெடியால் தமிழ் மக்கலை இவர் தன் வசம் ஈர்த்துள்ளார். அதனால், சினிமாவில் அவரைப் போல உருவ தோற்றத்தை வைத்து முன்னேறலாம் என பலரும் முயன்று வந்தனர்.

மேலும் படிக்க| 'சில பாடல்கள் அருவருப்பாக உள்ளது.. இது விஷத்தை ஆக்ஸிஜனோடு சுவாசிப்பது போன்றது'- உணர்ச்சிவசப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான்

அப்படி இருக்கையில், வடிவேலு சாயலில் இருப்பதால் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் சுகுமாரன். இவர், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். பரத்தின் காதல் திரைப்படத்தில் இவரது காமெடி பலரையும் கவர்ந்ததால் அவரது பெயரே காதல் சுகுமாராக மாறியது.

இந்நிலையில், காதல் சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சில ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு, நகை மற்ற...