இந்தியா, ஜூன் 15 -- நாடு முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,

"இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிள்ளைகளை அன்போடு வளர்த்து, உழைப்பின் மூலம் வழிகாட்டி, தன் குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் கொள்கைத் தந்தைகளாக, இன்றளவும் நம்மை வழிநடத்தும் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிய ஒப்பற்ற தலைவர்களுக்கும் இந்நாளில் எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Published by HT Digital Content Services with permissi...