இந்தியா, மே 18 -- குடியரசுத் தலைவர் அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய குறிப்பினை, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் மாநில சுயாட்சியைப்பாதுகாக்க உறுதிபூண்டுள்ள அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டுமென்றும், நீதிமன்றத்தின் முன் ஒரு ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட முன்வர வேண்டுமென்றும் வலியுறுத்தி, 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் படிக்க:- 'கண்ட இடத்தில் கடித்து வைத்த தெய்வச்செயல்! உடலையும் நாசம் செய்தார்!' திமுக நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், உச்சநீதிமன்றத்திற்கு குறிப்பு ஒன்றினை அனுப...