இந்தியா, மார்ச் 25 -- பெண்களின் தண்ணீர் பாட்டில்களில் சிறுநீர் கழித்ததற்காக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது ஒருவருக்கு, ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் நோயை உண்டாக்கி இருக்கிறது.

அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த முன்னாள் காவலாளியான லூசியோ கேடரினோ டயஸ், சிறுநீரை குடிநீர் பாட்டில்களில் கழித்ததை ஒப்புக்கொண்ட பின்னர் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளது.

ஒரு மருத்துவரின் அலுவலகத்தில் குற்றங்களைச் செய்ததற்காக, 2022ஆம் ஆண்டு, டயஸ் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்திருந்தார்.

இந்நிலையில் சம்பவத்தின்போது, ஒரு பொதுவான பகுதியில், ஐந்து கேலன் நீர் விநியோகிப்பான் இருந்தது. அதில் தான் கேடரினோ டயஸ் இவ்வாறு செய்திருக்கிறார்.எம்.ஏ என்னும்...