இந்தியா, ஏப்ரல் 28 -- கிரீன் டீ முதல் கேமமைல் டீ வரை எண்ணற்ற மூலிகை தேநீர்கள் உங்களை நாளை துவக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் இந்த குங்குமப்பூ டீயையும் சேர்த்துக்கொள்ளாம். இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குங்குமப்பூ அதன் அழகிய நிறத்துக்காகவும், சுவைக்காகவும் புகழ் பெற்றது. இது பிரியாணி மற்றும் இனிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. வீக்கத்துக்கு எதிரான குணங்களும் உள்ளன. இந்த இதமான டீயை பருகிக்கொண்டே உங்கள் நாளை துவங்கலாம். அதற்கான காரணங்கள் என்னவென்று பாருங்கள். ஏனெனில் இது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல மன ஆரோக்கியத்துக்கும் நல்லது.

நீங்கள் எப்போதெல்லாம் குறைவாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த தேநீரை பருகுங்கள். இந்த டீ மனஅழுத்தத்துக்கு எதிரான மருந்தைவிட ஆற்றல் கொண்டது என ஆய்வுகள் கூறுகின்...