இந்தியா, மார்ச் 11 -- கீர்த்தி சுரேஷ்: தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தன்னுடைய சகோதரியான ரேவதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல, தன் சகோதரியுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்தப்புகைப்படங்களில் சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன.

பிரபல இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரேவதி, தேங்க் யூ என்ற குறும் படத்தை எடுத்து இயக்குநராகவும் மாறினார். இந்தப்படத்தை அவரது அப்பாவான சுரேஷ் குமாரும் கணவர் நிதின் மோகனும் இணைந்து தயாரித்திருந்தனர். கீர்த்தி சுரேஷ்- டொவினோ தாமஸ் நடித்த வாஷி திரைப்படத்திலும் ரேவதி இணை தயாரிப்பாளராகவும் இருந்தார்.

மேலும் படிக்க | தமிழ் சினிமா ரீவைண்ட்: விஜய் சேதுபதி கிளாசிக் காதல் கதை.. ...