Coimbatore, மே 6 -- இந்த பிரியாணி கோயமுத்தூரில் மிகவும் பிரபலமானது. இதை செய்தற்கு சிக்கனை முதலில் 65 செய்துகொள்ளவேண்டும். அடுத்து பிரியாணி செய்து இரண்டையும் சேர்த்து, முட்டையுடன் சேர்த்து தாளித்து தம்போடவேண்டும். அதுதான் கில்மா பிரியாணி. இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள். இதைச் செய்வதற்கு முதலில் பிரியாணியை தயாரித்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், ஸ்டார் சோம்பு சேர்த்து பொரிந்தவுடன், பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமானவுடன், தக்காளி சேர்த்து மசித்துவிட்டு, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும். புதினாவையும் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வந்தவுடன், மிளகாய்த் தூள் மற்றும் பிரயாணி மசாலா சேர்த்து வதக்கவேண்டும். அட...