இந்தியா, ஜூன் 14 -- இரண்டு வகை ஆப்பிள்களை சேர்த்து உருவாக்கப்பட்டது தான் இந்த கிரீன் ஆப்பிள், இது ஒரு ஹைபிரிட் வகை ஆப்பிள் ஆகும். இதில் பயோ ஆக்டிவ் உட்பொருட்கள் மற்றும் ஃப்ளாவனாய்ட்களளும் மற்ற ஆப்பிள்களைக் காட்டிலும் அதிகளவு உள்ளது. கிரீன் ஆப்பிள் முதன்முதலில் ஆஸ்திரேலிய பெண் விவசாயி மரியா ஸ்மித் விளைவித்தார். இதனால் இவை கிரானி ஸ்மித் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது.

இளம் பச்சை நிறத்தில், சாறு நிறைந்த கடுமையான தோலைக்கொண்டது இந்த வகை ஆப்பிள்கள், இது மற்ற ஆப்பிள்களைவிட நீண்ட காலம் கெடாது. இது ஆரோக்கியம் நிறைந்த பழமாக உள்ளது. உடல் எடை குறைக்க உதவுகிறது. இதில் கலோரிகள் குறைவு, இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

ஒரு கிரீன் ஆப்பிளில், 50 கலோரிகள் உள்ளது. 13.6 கிராம் கார்போஹைட்ரேட், 0.44 கிராம் புரதச்சத்துக்கள், 20.8 கிரா...