இந்தியா, ஏப்ரல் 23 -- துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல்-ஐனையும் இணைக்கும் E66 நெடுஞ்சாலையில் புதிதாக பேஸ்பால் மைதானம் கட்டப்பட்டுள்ளது. இங்கு அமெரிக்கா மற்றும் ஜப்பானில் பிரபலமான, பேஸ்பால் விளையாட்டின் பேஸ்பால் யுனைடெட் தொடக்க சீசன் போட்டிகள் வரும் நவம்பரில் நடக்கவுள்ளன. இந்த மைதானம் தான் இந்த பேஸ்பால் தொடரில் பங்கேற்க இருக்கும் இந்தியாவை மையப்படுத்திய அணியின் உள்ளூர் மைதானமாக திகழப்போகிறது.

மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தை ஈடுபடுத்தும் முதல் தொழில்முறை பேஸ்பால் லீக் ஆக பேஸ்பால் யுனைடெட் போட்டிகள் அமைகிறது. தற்போது இந்த லீக்கின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மும்பை கோப்ராஸ், கராச்சி மோனார்க்ஸ், அரேபியா உல்வ்ஸ் மற்றும் மிட் ஈஸ்ட் ஃபால்கன்ஸ் ஆகிய நான்கு அணிகள் இந்த பிராந்தியத்தில் இருந்து இடம்ப...