இந்தியா, பிப்ரவரி 24 -- கிராம்பு, நாம் பிரியாணி மசாலாக்களில் அதிகம் பயன்படுத்தும் ஒன்றாகும். அதில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வீக்கக்துக்கு எதிரான குணங்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் காயங்களை இயற்கையான முறையில் குணப்படுத்த உதவுகிறது. இந்த குணங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம், செரிமானம், நோய் எதிர்ப்பை அதிகரித்து, வலிகளைப் போக்கக்கூடியவையாகும்.

கிராம்பு செரிமான எண்சைம்களைத் தூண்டுகிறது. இது வயிறு உப்புசம், வாயு மற்றும் செரிமானமின்மை ஆகியவற்றை குறைக்க உதவும். செரிமானம் எளிதாக நடக்க உதவும். அசிடிட்டியைத் தடுக்கிறது. இதை நீங்கள் உணவுக்குப் பின்னர் எடுத்துக்கொள்ளலாம்.

கிராம்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. மேலும் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்களும் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக...