இந்தியா, ஏப்ரல் 12 -- தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறியுள்ளதாகவும், அதில் இந்தியாவிலே மற்ற மாநிலங்களை விட 9.6 சதவீதம் வளர்ச்சி தமிழகத்தில்தான் ஏற்பட்டுள்ளது என்று அண்மையில் விளம்பரப்படுத்தி அரசு மார்தட்டிக்கொண்டது. தமிழகத்தின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலை என்ன என்பது குறித்து சமூக செயற்பாட்டாளர் மருத்துவர் புகழேந்தி விளக்குகிறார்.

இதுகுறித்து அவர் கூறிய விவரங்களும், விளக்கங்களும்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. இந்தியாவில் 15.6 சதவீதம் ஆகும். கிட்டத்தட்ட 40 ஆயிரம் தொழிற்சாலைகள் ஆகும். செயல்பட்டுக்கொண்டிருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்களும் தமிழகத்தில் தான் அதிகம். இந்தியாவில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழகத்தில்தான் உள்ளனர். ப...