இந்தியா, ஏப்ரல் 23 -- மரணத்தின் விளிம்பிற்கு சென்று திரும்பி வந்து உள்ளதாக சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பெண் ஜெய்ஸ்ரீ தெரிவித்து உள்ளார்.

ஜம்மு & காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில், சுற்றுலாப் பயணிகள் குழுவை பயங்கரவாதிகள் நேற்று (22-04-2025) நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 2 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 31 வயதான பரமேஸ்வர் என்பவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டு உள்ளது. 81 வயதான சாண்டனோ என்பவர் சுயநினைவின்றி சிகிச்சையில் இருந்து வருகிறார். இவர்கள் இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாகவும், தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உல்ளது.

மேலும் படிக்க:- இன்றைய தங்கம் விலை நிலவரம்:...