இந்தியா, ஏப்ரல் 23 -- பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவியை வழங்க அமித்ஷா திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு விவசாயத்தில் கவனம் செலுத்த போவதாக அறிவித்தார். பின்னர் பாஜகவில் இணைந்து அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரக ஆனார். 2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

மேலும் படிக்க:- 'ஆந்திராவில் இருந்து எம்பி ஆகும் அண்ணாமலை!' மத்திய அமைச்சர் ஆகவும் வாய்ப்பு! அமித்ஷாவின் மெகா ப்ளான்!

அவரது பதவிக்காலம் நிறைவு பெற்றதால், புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் த...