இந்தியா, ஏப்ரல் 25 -- ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ராணுவத் தளபதி ஜெனரல் உபயேந்திர திவிவேதி விரைவில் ஸ்ரீநகர் மற்றும் உதம்பூருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த தகவலை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவத் தளபதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியமர்த்தப்பட்டுள்ள மூத்த ராணுவ கமாண்டர்களை சந்திப்பார். மற்ற பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார். பள்ளத்தாக்கில் நிலவும் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்வார். பாகிஸ்தான் தரப்பில் இருந்து LoC-யில் போர் நிறுத்த மீறல்கள் மற்றும் ஊடுருவல் முயற்சிகள் குறித்த விரிவான தகவல்களையும் பெறுவார்.

மேலும் படிக்க | 'பகல்ஹாம் தாக்குதலும் எல்லை தாண்டிய தொடர்பும்' ஜி20 நாடுகளின் தூதர்கள...