இந்தியா, ஏப்ரல் 24 -- காக்கும் கடவுளாக விளங்கக்கூடியதுதான் காவல் தெய்வம். காவல் தெய்வ வழிபாடு என்பது நமது தமிழ்நாட்டில் மிகவும் அவசியமாகவும் விசேஷமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தை காக்கும் காவல் தெய்வமாக கோனியம்மன் விளங்கி வருகின்றார்.

நொய்யல் ஆற்றின் வடக்கு பகுதியில் இந்த கோனியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. பல விசேஷங்களைக் கொண்ட இந்த அம்மன் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கொடுக்கும் காவல் தெய்வமாக திகழ்ந்து வருகின்றார்.

மேலும் படிங்க| ராகு சுக்கிரன் சேர்க்கை மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்ற ராசிகள்

600 ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடாக இருந்தது கோயம்புத்தூர். இங்கு இருளர் இன தலைவரான கோவன் என்பவர் அந்த பகுதியை சீர்படுத்தி மக்கள் வாழும் பகுதியாக மாற்றி அமைத்துள்ளார். அதனால் அந்த இடம் கோவன் புத்த...