இந்தியா, மார்ச் 9 -- சூப் என்றால் சிலருக்கு அதிகம் பிடிக்கும். அதிலும் கிரிமியான மஸ்ரூம் சூப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அந்தளவு சுவையானதாக இருக்கும். ஆனால் இந்த மஸ்ரூம் சூப்பை நீங்கள் சாப்பிடும்போது அதில் மைதா, ஃபிரஷ் கிரீம், கார்ன் ஃப்ளார் என கலக்கும்போதுதான் அது கிரீமியானதாக வரும். ஆனால் அவை இல்லாமலும் கிரீமியான மஸ்ரூம் சூப் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதற்கு ஒரு சீக்ரெட்டான உட்பொருள் உள்ளது. அது என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டுமென்றால், நீங்கள் இந்த சூப் செய்முறையை முழுவதும் படிக்கவேண்டும். இதோ அந்த சூப்பை எப்படி செய்வது என்று பாருங்கள்.

* காளான் - 10 (நான்கு துண்டுகளாக நறுக்கியது)

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)

* ஸ்பிரிங் ஆனியனின் தண்டு - 4 (பொடியாக நறுக்கி...