இந்தியா, பிப்ரவரி 26 -- கால்பந்து: பார்சிலோனா vs அட்லெடிகோ மாட்ரிட் கால்பந்து மேட்ச் 4-4 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற கோபா டெல் ரே அரையிறுதியின் பரபரப்பான முதல் லெக் ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக அலெக்சாண்டர் சோர்லோத் ஸ்டாப்பேஜ் டைமில் கோல் அடித்து சமன் செய்தார். பார்சிலோனா அணி 2-0 என பின்தங்கியிருந்த பின்னர் 4-3 என முன்னிலை பெற்றது, ஆனால் கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில் மாற்று வீரர் சோர்லோத் அதை சமன் செய்தார்.

லூயிஸ் கம்பெனி ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் ஜூலியன் அல்வாரெஸ் மற்றும் அன்டோய்ன் கிரீஸ்மேன் ஆகியோரின் உதவியுடன் அட்லெடிகோ அணி 2 கோல்கள் முன்னிலை பெற்றது. இடைவேளைக்கு முன் பார்சிலோனா சார்பாக பெட்ரி, பாவ் கியூபர்சி, இனிகோ மார்டினெஸ் ஆகியோர் கோல் அடித்து ஆட்டத்தை ம...