இந்தியா, மார்ச் 15 -- கால்சியச் சத்துக்கள் பாலில்தான் அதிகம் உள்ளது. ஆனால் சில பழங்களிலும் கால்சியச் சத்துக்கள் உள்ளது. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். பால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கால்சியச் சத்துக்களுக்காக பருகவேண்டிய ஒன்றாகும். பால் மற்றும் பால் பொருட்களிலும் கால்சியச் சத்துக்கள் உள்ளது. கால்சியம் எலும்புகளுக்கு நல்லது. எலும்புப்புரை போன்ற நோயைத் தடுக்க கால்சியம் தேவை. உங்களுக்கு பாலும், பால் பொருட்களும் பிடிக்கவில்லையென்றால், நீங்கள் இந்த பழங்களை சாப்பிடலாம். அதிலும் கால்சியச் சத்துக்கள் உள்ளது.

18 வயதை கடந்த ஒருவருக்கு 700 மில்லி கிராம் கால்சியம் தேவை. 99 சதவீத கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளில் சேமிக்கப்படுகிறது. அது எலும்புகளுக்கு வலுவைக் கொடுக்கிறது. ஊட்டச்சத்து நிபுணர் அன்சுல் சிங் கூறுகையில், 'கால்சியம்...