இந்தியா, ஏப்ரல் 1 -- இந்த பானம் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தீபாலி ஷர்மா என்ன சொல்கிறார்?

யாருக்குத்தான் தங்களின் நாளை ஒரு இதமான பானத்தைப் பருகி துவங்குவது பிடிக்காது. அது பலருக்கு டீ அல்லது காபிதான். சூடான தண்ணீரில் தேனைக் கலந்து பருகுவது மற்றொரு நல்ல தேர்வு. இது ஆரோக்கியமானதும் கூட. தண்ணீரில் தேன் கலந்து பருகும்போது, உங்கள் ஆரோக்கியத்துக்கு நீங்கள் நினைப்பதைவிட அதிக நன்மைகளைக் கொடுக்கின்றன. சூடான தண்ணீர் மற்றும் இனிப்பான தேனும், உடல் எடை முதல் நோய் எதிர்ப்பு வரைத் தருகின்றன.

சூடான தண்ணீரில் தேன் கலந்து பருகும்போது, உங்கள் உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது. தேனை சூடான தண்ணீரில் கலந்து பருகும்போது அது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இது உடல் எடையை முறையாகப் பராமரிக்க உதவுகிறது. அதிக கலோரிகள் கொண்ட சர்க்கரை உணவுகள் சாப்பிட...