இந்தியா, மார்ச் 15 -- காலையில் எழுந்தவுடன் நல்ல சம்பார், இரண்டு வகை சட்னிகளுடன் இட்லி, தோசை, உப்புமா, ஆப்பம், சப்பாத்தி, பூரி என சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்களா? மாவை ஆட்டி ஒரு வாரத்துக்கு ஃபிரிட்டிஜில் வைத்துவிட்டு, காலையும், மாலையும் இட்லி, தோசையை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்களா? அது எதுவும் தேவையில்லை. இட்லி, தோசை அல்லது வேறு ஏதேனும் டிஃபன் என்பது வாரத்துக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டும் போதுமானது. அதற்கு பதில் காலையில் என்ன சாப்பிடவேண்டும்.

இதுகுறித்து மருத்துவர் கு.சிவராமன் கூறியிருப்பது என்னவென்றால், நாம் மாவை அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் கவலை இல்லை என்று நினைக்கிறோம். ஆனால் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் இட்லி, தோசை போன்ற டிஃபன் வெரைட்டிகளை சாப்பிட வேண்டும். மற்ற நாட்களில் என்ன சாப்பிட வேண்டும் என்று அவர் தனது...