இந்தியா, பிப்ரவரி 23 -- தினமும் காலை நாம் சாப்பிடும் உணவு தான் அன்றைய நாள் முழுவதும் இயங்கத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. மேலும் சுறு சுறுப்பாக இருக்கவும் காலை நேர சாப்பாடு உதவுகிறது. காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு நிச்சயம் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த சமயத்தில் வீட்டில் உள்ளவர்கள் வழக்கமான காலை உணவு என அதனை தவிர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கீரை, தானியங்கள் என உணவில் சேர்க்கும் போது குழந்தைகள் அதனை விரும்புவதில்லை. இந்த சமயத்தில் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடிய காய்கறிகள் மற்றும் கீரையை குழந்தைகள் விரும்புமாறு உணவில் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அதற்காகத் தான் நாங்கள் இங்கு புது விதமான காலை உணவு வகையை கொண்டு வந்துள்ளோம்.

நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதாகவும், பல பலன்களை அள...