இந்தியா, மே 20 -- தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். 54 வயதிலும் சளைக்காமல் உழைத்துக்கொண்டிருக்கும் அஜித் தற்போது ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் கார் ரேஸில் அஜித்தின் ரோல் மாடலும், மறைந்த கார் ரேஸ் வீரருமான அயர்டன் சென்னாவிற்கு நடிகர் அஜித்குமார் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அஜித் கார் ரேஸ் டீம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ' அஜித்குமார் இமோலா சர்க்யூட்டில் டம்பெரெல்லோ கார்னரில் மே 1 அன்று நடைபெற்ற கார் பந்தய போட்டியில் உயிரிழந்த கார் ரேஸ் வீரரும், மூன்று முறை ஃபார்முலா 1 உலக சாம்பியன்ஷிப்பை வென்ற பிரேசில் நாட்டு வீரருமான அயர்டன் சென்னாவிற்கு அஜித்குமார் அஞ்சலி செலுத்தினார்' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்தாண்டு தொடக்கத்தில் துபாய...