இந்தியா, ஜூலை 10 -- நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு மிகவும் பிடித்தமான கார் ரேஸிங், பைக் ரைட் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார் தற்போது ஐரோப்பிய நாடுகளான ருமேனியா, பல்கேரியாவில் மோட்டர் சைக்கிள் சாகச சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கார் பந்தயத்தில் ஈடுபட்டு வந்த அவர், தற்போது அதிலிருந்து குட்டி பிரேக் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி ருமேனியா மற்றும் பல்கேரியாவின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வலம் வந்துள்ளார். அவரது குழுவினர், பைக்கர்ஸ் குழுவுடன் இணைந்து நடிகர் அஜித்தின் பைக் பயண சாகச வீடியோவை அவரது குழுவினர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அஜித்தின் குழுவினர், பைக்கர்ஸ் குழுவை அவர் வழிநடத்தும் வீடியோவை எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர், அதில், "எல்லைகள் ஒரு வரைபடத்தில் உள்ள கோடுகள் மட்டுமே. ஆர்வம் ...