இந்தியா, ஜூன் 26 -- நடிகர் கிருஷ்ணா வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி இருக்கின்றனர். சென்னை பெசன்ட் நகர் கலாக்ஷேத்ரா காலனியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அவரது வீடு, கார் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல, அவர் பயன்படுத்திய மருந்துகள் உட்பட அனைத்தையும் போலீசார் கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்து சென்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கூடவே, கிருஷ்ணாவின் சமூக வலைதள கணக்குகள், வங்கி பரிவர்த்தனைகள் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இருக்கும் பிரசாத், பிரதீப் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதையு...