இந்தியா, மே 7 -- சிறையில் அடைக்கப்படும் ராஜராஜன்... பூஜையில் காத்திருந்த அதிர்ச்சி! கார்த்திகை தீபம் அப்டேட்

சிறையில் அடைக்கப்படும் ராஜராஜன்.. பூஜையில் காத்திருந்த அதிர்ச்சி கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடக்க இருப்பது என்ன என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் துரையால் ராஜராஜன் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ராஜராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இன்னொரு பக்கம் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் தொடங்கி நடக்கிறது. அப்போது பூஜையில் ராஜராஜன் சில சடங்குகளை செய்ய வேண்டும...