இந்தியா, மார்ச் 4 -- கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 04 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷை கார்த்திக் ரூமுக்குள் அடைத்து வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.வாங்க

அதாவது, மகேஷ் ரூமுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருக்க மாயா அவனை தேடி அலைந்தாள். பின் ஒரு வழியாக அவனை கண்டுபிடித்து ரூம் கதவை திறந்து மாயாவும் சந்திரகலாவும் விடுவிக்கின்றனர். பின் மூவரும் மாப்பிள்ளையின் துணியை வாங்க விரைந்து வருகின்றனர்.

அதற்குள் மகேஷ் வரவில்லை என்பதால், மாப்பிள்ளை தோழனான கார்த்தியை டிரெஸ் வாங்க சாமுண்டேஸ்வரி அழைக்கிறாள். இதனால் மகேஷ்க்கு பதிலாக மேடை ஏறிய கார்த்திக் சாமுண்டேஸ்வரி ர...