இந்தியா, பிப்ரவரி 22 -- கார்த்திகை தீபம் சீரியல் பிப்ரவரி 22 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷை துணிக்கடைக்கு அழைத்து சென்று மாயாவை திசை திருப்பி, கார்த்திக்கின் திட்டத்தின் அவளது போன் தூக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, துணி எடுத்து கொண்டு வீட்டிற்கு வரும் மகேஷ், மாயாவை கூப்பிட்டார். அப்போது தான் அது மாயா இல்லை என்பது தெரிய வருகிறது. உடனே அவளுக்கு விடாமல் போன் செய்ய மாயா போன் கார்த்தியிடம் இருக்கிறது.

அடுத்ததாக கார்த்திக் போனை எடுத்து என்ன மகேஷ் மாயாவை தேடுறியா? அவங்களை நான் தான் கடத்தி வச்சிருக்கேன், ஒழுங்கு மரியாதையா ரேவதி கிட்...